search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை குடிநீர் வாரியம்"

    • குடிநீர் வினியோகம் இன்று இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பில், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. இதன்காரணமாக, சென்னையில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணி முதல் வருகிற 27-ந்தேதி இரவு 9 மணி வரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.

    அதன்படி, அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டு, பாடி, பார்க்ரோடு, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, அண்ணாநகர் மண்டலத்தை பொறுத்தவரையில் அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவல்லிகேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர் பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் அனைத்து பகுதிகளிலும், அடையாறு மண்டலத்தில் ஆர்.ஏ.புரம், அடையாறு, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள https://cmwssb.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில், தொட்டிகள் மற்றும் தெரு நடைகள் மூலம் லாரிகள் குடிநீர் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 044-45674567 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    சென்னை:

    நெம்மேலியில் அமைந்துள்ள நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குடிநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 15-ந் தேதி மதியம் 2 மணி முதல் 16-ந்தேதி அதிகாலை 2 மணி வரை மண்டலம் 11, 12, 13, 14 மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுதூர், ராதா நகர் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நந்தம்பாக்கம், வளசரவாக்கம், நொளம்பூர், ராமாபுரம், ஆலந்தூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https:cmwssb.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

    • அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட குடிநீர் அப்பகுதியில் 24 மணிநேரமும் வினியோகிக்கப்படும்.
    • இதுவரை சுமார் 2420 வீடுகளில் இந்த ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளன.

    போரூர்:

    சென்னையில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தினமும் சுமார் 2 முதல் 3 மணிநேரம் மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இதற்கு மாற்று ஏற்பாடாக தினமும் 24 மணிநேரமும் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக குடிநீர் இணைப்பில் புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இதற்கான பணிகளை மெட்ரோவாட்டர் தொடங்கி உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர், பயன்படுத்தும் தண்ணீரின் அளவை மின்சாரம் போல் கணக்கிட உதவும். வளசரவாக்கம் மண்டலத்தில் மெஜஸ்டிக் காலனி(வார்டு152), ராமகிருஷ்ணாநகர் (வார்டு149) பகுதியில் 8212 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி ரூ.69.64 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    எனவே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட குடிநீர் அப்பகுதியில் 24 மணிநேரமும் வினியோகிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 70 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள்.

    ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை கணக்கிடும். இது மின்சார பயன்பாடு போன்று துல்லியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    பயன்படுத்தும் குடிநீருக்கான கட்டணமும் மின்சார கட்டணம் போன்று பயன்படுத்தும் அளவை பொருத்து இருக்கும்.

    குடிநீர் சப்ளை செய்வதற்காக மெஜஸ்டிக் காலனியில் 19 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மற்றும் பூமிக்கு அடியில் 8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், ராமகிருஷ்ணா நகரில் 29 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் உள்ளன. இதற்காக 100 மி.மீட்டர் முதல் 450 மி.மீட்டர் விட்டம் வரையிலான குடிநீர் பைப்புகள் சுமார் 84 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இதுவரை சுமார் 2420 வீடுகளில் இந்த ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளன. பைப்புகள் அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் பரிசோதித்து வருகிறோம். 12 மீட்டர் உள்ள பைப்புகளில் ஆரம்பம் முதல் கடைசி வரை சீரான அழுத்தத்தில் தண்ணீர் செல்ல திட்டமிட்டு 6 இடங்களில் வால்வுகள் அமைக்கப்படுகிறது. தண்ணீர் செல்வதில் பிரச்சனை இருந்தால் கூடுதல் அழுத்தம் கொடுத்து தண்ணீர் சப்ளை செய்யப்படும். எனவே பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தண்ணீரை தங்களது தொட்டிகளில் பிடித்து வைத்துக்கொள்ளலாம் என்றார்.

    • பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.
    • குடிநீா் வாரியத்தின் குடிநீா்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு இலவசமாக குடிநீா் வழங்கப்படும்.

    சென்னை:

    பொதுமக்கள் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகத்தைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.

    இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

    "சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044-45674567 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீா் வாரியத்தின் குடிநீா்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு இலவச மாக குடிநீா் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
    • குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் மையங்கள் 1-ந்தேதி முதல் செயல்படாது.
    • குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள், இணைப்பு கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை அக்டோபர் 1-ந்தேதி முதல் இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல், காசோலை, டி.டி. மட்டுமே செலுத்திட வேண்டும். ரொக்கமாக பெறப்பட மாட்டாது.

    அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். மேலும் பணிமனை அலுவலகங்களில் தற்போது செயல்பட்டு வரும் மையங்கள் 1-ந்தேதி முதல் செயல்படாது. பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, டி.டி. பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம். யூ.பி.ஐ. கியூஆர் குறியீடு மற்றும் Pos போன்ற கட்டண முறைகளை பயன்படுத்தி குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 9-ந்தேதி அனைத்து பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது.
    • பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பகுதி அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகத்திலும் ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள கட்டணங்கள், புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வழியாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    • தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்து செல்லும் 750 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மி.மீ. விட்டமுள்ள உந்து குழாயை இணைக்கும் பணிகள் மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஸ்டெர்லிங் சாலையில் 31-ந் தேதி மாலை 7 மணி முதல் 1-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை இந்த பணிகள் நடைபெறுவதால் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வராது. எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னை:

    செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இதன் காரணமாக அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களில் ஜூலை 31-ந் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1-ந்தேதி காலை 8 மணி வரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளில் குடிநீர்த் தொட்டி மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும். குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி, வழக்கம் போல மேற்கொள்ளப்படும்.

    மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் கூட்டங்கள் மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் கூட்டங்கள் மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

    திருவான்மியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 15 மண்டலங்களில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிநீர் வரி, நிலுவையில் உள்ள கட்டணம், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல்வரி 1.25 சதவீதத்தில் இருந்து ஜூலை 1-ந்தேதி முதல் 1 சதவீதமாக குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.
    • பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய தளம் வழியாக செலுத்தலாம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25 சதவீதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல்வரி 1.25 சதவீதத்தில் இருந்து ஜூலை 1-ந்தேதி முதல் 1 சதவீதமாக குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.

    எனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வரை) உள்ள நுகர்வோர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் குடிநீர், கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி மேல் வரியினை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை இணைய தளம் வழியாக www.cmwssb.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.

    பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலங்களில் வரைவோலை, காசோலை மற்றும் ரொக்கமாகவும், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை, வரைவோலையாகவும் செலுத்தலாம்.

    மேலும் யூ.பி.ஐ., கி.யூ.ஆர். குறியீடு மற்றும் Pos போன்ற பிற கட்டண முறைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம். எனவே பொதுமக்கள் குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை உரிய காலத்திற்குள் செலுத்தி வாரியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
    • தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் செலுத்தலாம்.

    சென்னை :

    இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்புகளை எளிதில் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் கடந்த 6-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அல்லது பணிமனை அலுவலகங்களில் நேரிடையாகவும், தொலைபேசி எண் 044-45674567 மற்றும் இணையதளம் https://cmwssb.tn.gov.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆவணங்கள் உரிமையாளரிடம் சரிபார்க்கப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று சட்டத்திபடி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னர் உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், இணைப்பிற்குரிய முழுத் தொகையையோ அல்லது முதல் தவணைத் தொகையையோ செலுத்தியவுடன் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்கள் (சாலை வெட்டு மறுசீரமைப்புக்கான கட்டணங்கள் உள்பட) சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

    தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) 1,800 சதுர அடி வரை இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களும் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் (6 மாதங்களுக்கு ஒருமுறை 5 ஆண்டுகளில்) செலுத்தலாம்.

    தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் 2,700 சதுரஅடி வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு ஒரே தவணையாகவோ அல்லது 3 தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 18 மாதங்களில்) செலுத்தலாம்.

    பிற வகையான கட்டிட உரிமையாளர்கள், கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கான முழு கட்டணத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    இணையம் வழியாக செலுத்தலாம்

    விண்ணப்பதாரர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்களை இணைய வழியிலான வசதியை பயன்படுத்தியோ, ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×